search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்"

    டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜாலியன்வாலாபாக் நினைவு அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். #Modiinaugurates #Bosemuseum #Jallianwalamuseum #RedFort
    புதுடெல்லி:

    இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பொற்கோவில் அமைந்துள்ள அம்ரித்சர் நகரில் ஜாலியன் என்ற இடத்தில் 13-4-1919 அன்று ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் வெள்ளையர்களின் ராணுவம் பீரங்கிகளால் சுட்டதில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

    இந்திய வரலாற்றில் கருப்புதினமாக பதிவான இந்த நாளை நினைவுகூரும் விதமாகவும், இந்திய தேசிய ராணுவம் என்ற படைப்பிரிவை ஏற்படுத்தி நாட்டின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை தொடங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளான இன்று அவரது நினைவை போற்றும் வகையிலும் டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க  செங்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ஜாலியன்வாலாபாக் நினைவு அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.


    இந்த அருங்காட்சியகத்தில் முதலாம் உலகப்போர் தொடர்பான சிறப்பு புகைப்படங்களும், முதலாம் உலகப்போரின்போது கவிக்குயில் சரோஜினி நாயுடு இயற்றிய எழுச்சிகீதமும் இடம்பெற்றுள்ளது.

    இவற்றை திறந்துவைத்த பிரதமர் மோடி இங்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு நினைவுக்குறிப்புகளை சுமார் ஒருமணி நேரம் பார்வையிட்டார். #Modiinaugurates #Bosemuseum #Jallianwalamuseum #RedFort

    அந்தமானில் உள்ள மூன்று தீவுகளுக்கு இன்று பெயர் மாற்றம் செய்த பிரதமர் மோடி இங்குள்ள ராஸ் தீவு இனி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றழைக்கப்படும் என்று அறிவித்தார். #Modirenames #threeislands #Rossislands #Nethajiislands
    போர்ட் பிளைர்:

    அரசுமுறை பயணமாக இன்று அந்தமான் வந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்தமான் நிக்கோபார் தீவுகளை கடந்த 2004-ம் ஆண்டு தாக்கிய சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கார் நிக்கோபார் நகரில் உள்ள நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர், இங்குள்ள பி.ஜே.ஆர். விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார் நிக்கோபார் பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தடுப்பு சுவர் திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    போர்ட் பிளைர் நகரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த மோடி, வெள்ளையர் ஆட்சி காலத்தில் இங்குள்ள காலா பானி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 

    பின்னர், போர்ட் பிளைர் நகரில் உள்ள மெரினா பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அந்தமானில் உள்ள மூன்று தீவுகளுக்கு இன்று பெயர் மாற்றம் செய்த பிரதமர் மோடி இங்குள்ள ராஸ் தீவு இனி நேதாஜி  சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றழைக்கப்படும் என்று அறிவித்தார். 

    30-12-1943 அன்று நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் சார்பில் அந்தமானில் இந்தியாவின் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் இன்று 150 அடி உயரக் கொடிக்கம்பத்தில் இந்தியாவின் கொடி இங்கு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நிகழ்ச்சியை நமது நாட்டு மக்கள் நீண்டகாலம் நினைவில் வைத்திருப்பார்கள்.

    சுபாஷ் சந்திரபோஸ் நினைவை கவுரவிக்கும் வகையில் கூட்டத்தில் இருந்த மக்கள் அனைவரும் தங்களது கை பேசிகளில் உள்ள விளக்குகளை எரியவிட்டு அஞ்சலி செலுத்துமாறு மோடி கேட்டு கொண்டார். மக்களும் அவ்வாறே செய்து ‘நேதாஜி வாழ்க’ என கோஷமிட்டனர். இங்குள்ள பல்கலைக்கழகத்துக்கு நேதாஜியின் பெயர் சூட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

    இதேபோல், நீல் தீவு இனி ஷஹீத் தீவு என்றும் ஹாவ்லாக் தீவு இனி சுயராஜ் தீவு என்றும் அழைக்கப்படும். 

    அந்தமான் மக்களின் அத்தியாவசிய தேவைகளான தண்ணீர், மின்சாரம் ஆகிய முக்கிய கட்டமைப்பு வசதிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டடுள்ளதாக குறிப்பிட்ட மோடி, அடுத்த 20 ஆண்டுகள்வரை இங்குள்ள மக்களுக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படாத வகையில் டனிகாரி அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். #Modirenames #threeislands #Rossislands #Nethajiislands
    நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தியை ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய அரசை அவரது மகள் அனிதா போஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். #Netaji #Netajidaughter
    புதுடெல்லி:

    இந்திய தேசிய ராணுவம் என்ற போராளிகள் பட்டாளத்தை உருவாக்கி, இந்திய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தி, வெள்ளையர் அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

    இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்ற சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட ஜெர்மனி படைகளுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காக போராடினார்.

    1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி போர் விமானத்தில் ஜப்பான் நோக்கி அவர் சென்றுக்கொண்டிருந்த போது, கோளாறு காரணமாக அந்த விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், நேதாஜி பலியாகி விட்டதாக கருதப்படுகிறது.

    நேதாஜியின் அஸ்தி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் உள்ள ரென்கோஜி ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது நேதாஜியின் அஸ்தி தானா? என்பதை இந்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாத நிலையில் நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு அவரது மகள் அனிதா போஸ் பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.

    நேதாஜி, கணவருடன் அனிதா போஸ்.

    இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்ததாக நம்பப்படும் நேதாஜியின் 73-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நேதாஜியின் மகள் அனிதா போஸ், ‘தாய்நாடான இந்தியாவுக்குவர வேண்டும் என என்னுடைய தந்தை மிகவும் ஆசைப்பட்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரது ஆசை நிறைவேறாமல் போனது.

    எனினும், சுதந்திர இந்தியாவை அவரது அஸ்தியாவது தொட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவரது ஆசை பூர்த்தி அடையும். மிக தீவிரமான இந்து பக்தராக இருந்த அவரது உடலின் மிச்சத்தை கங்கை ஆற்றில் கரைக்க வேண்டியது அவசியம்.

    எனவே, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தியை ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்ற எனது பழைய கோரிக்கையை அவரது 73-வது நினைவு தினமான இன்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்’ என குறிப்பிட்டார். #Netaji #Netajidaughter #Netajimortalremains
    ×